மீண்டும் இளமை துள்ளலுடன் துள்ளுவதோ இளமை ஷெரின் - படங்கள்

Geetha Priya| Last Updated: வியாழன், 12 ஜூன் 2014 (14:55 IST)
அழகும் அபிரிதமான திறமையும் கொண்ட நடிகை ஷெரின். துள்ளுவதோ இளமைக்குப் பிறகு பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் திறமைக்கு தீனி போடாத படங்களில் நடித்தே திரையுலகிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தனது அழகான தெற்றுப்பல்லை சரிசெய்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக பீமா படத்தில் ஒரு பாடலுக்கு விக்ரமுடன் ஆடியதாக ஞாபகம். நந்தாவுடன் ஒரு படத்திலும் நடித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஷெரின். படம் மலேசியா நண்பர்கள்.
 
கரண் நடித்த தீ.நகர், ஷாம் நடித்த அகம் புறம் படங்களை இயக்கியவர் திருமலை. நெல்லை சந்திப்பு, மான் வேட்டை போன்ற படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவர் இயக்கி நாயகனாக நடிக்கும் படம்தான் மலேசியா நண்பர்கள். இந்தப் படத்தில் ஷெரின் ஹீரோயினாக ரீ என்ட்ரியாகிறார்.
மலேசியா தமிழர்கள் சொந்தமாக படங்கள் எடுக்க ஆரம்பித்துள்ளனர். மலேசியா தமிழர்களுக்காக இங்குள்ள திரை நட்சத்திரங்கள் நடிப்பதும், படம் இயக்குவதும் உண்டு.

இந்தவகை படங்கள் மலேசியாவில் மட்டுமே திரையிடப்படும். பாக்யராஜ்கூட அப்படியொரு மலேசிய தமிழ் படத்தில் நடித்தார். 
 


இதில் மேலும் படிக்கவும் :