1. இதர வாசிப்பு
  2. »
  3. குழந்தைகள் உலகம்
  4. »
  5. கவிதைகள்

குழந்தை

குழந்தை
பார‌திதாச‌னி‌ன் க‌விதை‌த் தொகு‌ப்‌பி‌ல் இரு‌ந்து எடு‌க்க‌ப்ப‌ட்ட க‌விதை.

மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்
செல்வக் குழந்தையின் சிரிப்பு, நல்ல
இன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ
அறஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ
ு‌ளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற
ஒ‌ி இமை விலக்கி வெளிப்படும் கண்ணால்
முதுவை யத்தின் என்னவோ அதனை எவர்தாம் அறிவார்?
தங்க மாதுளைச் செங்கனி பிளந்த
மாணிக்கம் அந்த மதலையின் சிர்ப்பு.
வாரீர், அணைத்து மகிழவே ண்டாமோ?
பாரீர் அள்‌ளிப் பருகிடமாட் டோமோ?
செம்பவ ழத்துச் சிமிழ் சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம், சிரித்தது வானமே.
About Writer
Webdunia