1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. அ.கேஸ்டன்
Written By அ.கேஸ்டன்
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2016 (12:26 IST)

பற்றி எரியும் இந்தியா – மௌனம் கலைக்காமல் வேடிக்கைப் பார்க்கும் மோடி

ஊழல் குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் அரசாங்கத்தை தூக்கி எரிந்து விட்டு பாஜக ஆட்சியை கொண்டுவந்தோம் அந்த ஆட்சியினால் இந்திய மக்கள் படும் பாட்டை விவரிக்கும் பதிவு.

மாற்றம் வேண்டும், எங்கும் ஊழல் எதிலும் ஊழல், பாதுகாப்பின்மை அண்டையில் இருக்கும் சிறிய நாடுகள் கூட எச்சரிக்கை விடுகின்றன. செயல்படாத பிரதமர் மௌனமாக இருக்கிறார். விலைவாசி உயர்வு, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு இவை அனைத்தும் முந்தய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது பாரதிய ஜனதா கட்சி வைத்த குற்றச்சாட்டுகள்.

 
குற்றச்சாட்டோடு நிறுத்திவிடாமல் மூன்று முறை குஜராத் முதல்வரான நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி மோடி அலை ஒன்றை உருவாக்கி நாடு முழுவதும் தீவிர பரப்புரையை மேற்கொண்டனர். அதன் பலனாக தாங்கள் நினைத்தது போல் ஆட்சியை கைப்பற்றி நரேந்திர மோடியை பிரதமர் பதவியில் அமரவைத்து, ஆட்சி சிம்மாசனத்தில் தனிப்பெரும்பான்மையுடன் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே மக்கள் இவர்களுக்கு தனிப்பெரும்பான்மை அளித்தது, பாரதிய ஜனதா கட்சி மீதான நம்பிக்கையிலா? அல்லது காங்கிரஸ் மீதானா வெறுப்பினால் தானா? என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக, இந்திய அரசியலை பெரும்பாலான மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள். அதன் வெளிப்பாடே இந்த ஆட்சி மாற்றம் எனலாம். அதைத்தான் இப்பொழுது ஆட்சியில் இருபவர்களுக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மக்கள் உங்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் ஆட்சி மாற்றம் வேண்டும், ஊழலில் என் தேசம் மடிந்து கொண்டிருக்கிறது என்று எண்ணிய கோடிக்கணக்கான இந்தியர்களில் நானும் ஒருவன். ஆனால் இன்று அதை நினைத்து வருத்தப்படுகிறேன். ஏன் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம்? என்று. அதற்காக என் மனதுக்குள் எழுந்த சில காரணங்களை தொடர்ந்து இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.
 
நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை தொடக்கத்தில் வரவேற்றேன். காரணம், புதிய அரசாங்கத்திற்கு மாற்றங்கள் கொண்டு வர சிறிது காலம் தேவைப்படும் என்பதற்காகத்தான். நாட்கள் செல்ல, செல்ல அதன் செயல்பாடுகள் என்னை மிகுந்த வருத்தமடைய வைக்கிறது.
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்......

எந்த காரணத்திற்காக மாற்றத்தை கொண்டு வந்தோமோ அதே காரணங்களை இவர்கள் மீதும் வைக்க வழிசெய்கிறார்கள். ஆட்சி மாற்றம் தான் வந்ததே தவிர, ஆட்சியில் மாற்றம் வரவில்லை.
 
சாதி, மதம், இனம், மொழி என பல முகங்களை கொண்ட பெருமைமிக்க இந்திய தேசத்தை துண்டாட நினைக்கிறார்கள். சமீபத்திய நிகழ்வுகள் அதை தான் சுட்டிக்கட்டுகிறது.

 
ஊழல் குற்றச்சாட்டுகள் வைத்து ஆட்சியை பிடித்தவர்கள் மீது குத்தப்பட்ட கரும்புள்ளி போல் அமைந்துள்ளது வியாபம் ஊழல். மத்தியப்பிரதேச ஆளுனர் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் சம்மந்தப்பட்ட இந்த ஊழலில் மர்ம மரணங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
 
தூய்மையான, நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை கொடுக்க வந்தவர்கள் இதற்காக எடுத்த நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் படி உள்ளதா?
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.......

எந்த காரணத்திற்காக மாற்றத்தை கொண்டு வந்தோமோ அதே காரணங்களை இவர்கள் மீதும் வைக்க வழிசெய்கிறார்கள். ஆட்சி மாற்றம் தான் வந்ததே தவிர, ஆட்சியில் மாற்றம் வரவில்லை.
 
சாதி, மதம், இனம், மொழி என பல முகங்களை கொண்ட பெருமைமிக்க இந்திய தேசத்தை துண்டாட நினைக்கிறார்கள். சமீபத்திய நிகழ்வுகள் அதை தான் சுட்டிக்கட்டுகிறது.
 
ஊழல் குற்றச்சாட்டுகள் வைத்து ஆட்சியை பிடித்தவர்கள் மீது குத்தப்பட்ட கரும்புள்ளி போல் அமைந்துள்ளது வியாபம் ஊழல். மத்தியப்பிரதேச ஆளுனர் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் சம்மந்தப்பட்ட இந்த ஊழலில் மர்ம மரணங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
 

 
தூய்மையான, நேர்மையான, ஊழலற்ற ஆட்சியை கொடுக்க வந்தவர்கள் இதற்காக எடுத்த நடவடிக்கைகள் திருப்தியளிக்கும் படி உள்ளதா?
 
மாட்டிறைச்சி உண்டதனால் உத்திரப் பிரேதச மாநிலம் தாத்ரியில் இஸ்லாமிய முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அதை தொடர்ந்த வன்முறைகளும், மிரட்டல்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
 
மாட்டிறைச்சி விவகாரத்தில் ஹரியான முதலமைச்சரின் சர்ச்சை பேச்சு. வெந்த புண்ணில் நெய் ஊற்றுவது போல் உள்ளது. இவை இந்திய சிறுபான்மை மக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல பார்ப்பது போல் உள்ளது.
 
நான் உண்ணும் உணவை தீர்மாணிப்பதற்கு நீங்கள் யார்? இந்தியா இந்துக்களுக்கு மட்டம் உரிய தேசம் அல்ல; இங்கு எல்ல மத மக்களும் வாழ உரிமை உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் எங்கள் உணவை நீங்கள் தீர்மானிக்கும் உரிமையை உங்களுக்கு தரவில்லை. பன்முகங்களை கொண்ட ஒன்றுபட்ட தேசம் இது.
 
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்கவில்லை என்றால் நீங்கள் உண்ணாதீர்கள், எங்களை ஏன் வற்புறுத்துகிறீர்கள்? நானும் மாட்டிறைச்சி உண்ணக் கூடாது என்று சொல்வதில் என்ன நியாயம் உள்ளது.
 
உங்கள் மத உணர்வை நாங்கள் மதிக்கிறோம்! அதற்காக நாங்களும் உங்களை பின்பற்ற எதிர்பர்ப்பது மிகப்பெரிய அத்துமீறல். உங்கள் உணவில் நாங்கள் தலையிடாத பொழுது, நீங்கள் எங்கள் வீட்டு அடுப்பில் என்ன வேகக்கூடாது என தலையிடுவது வரம்பு மீறிய செயலாகவே உள்ளது.
 
மாட்டிறைச்சி விவகாரத்தில் நாடு முழுவதும் அத்துமீறல்கள் நிகழ்ந்தபொழுதும், நிகழும்போது மத்திய அரசு மௌனமாகவே இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கருத்து என்ன?
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.........

முந்தய காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தபோது அண்டை நாடுகள் தான் இந்தியாவிற்கு அச்சுருத்தலாக இருந்து வந்தது. ஆனால், இப்பொழுது தேசத்திற்குள் இருப்பவர்களே அச்சுருத்தலாக இருக்கிறார்களே! தேர்தல் பரப்புரையில் இந்திய மக்களின் பாதுகாப்பு குறித்து பேசிய பிரதமரின் மௌனம் கலையட்டுமே.
 
காஷ்மீர் சட்டப் பேரவையில் மாட்டிறைச்சி விருந்து நடத்தியதாக கூறி சுயேச்சை உறுப்பினர் மீது பாஜக உறுப்பினர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதல் எந்த வகையில் ஞாயம்?
 

 
வெளிநாட்டுக்கு சென்று வெளிநாட்டினர் மத்தியில் எதிர்கட்சிகளை விமர்சித்த இந்திய பிரதமர் காஷ்மீர் சட்டசபையின் மாண்பை காலில் போட்டு மிதித்த மாண்புமிகு உறுப்பினர்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்?
 
உத்திரப் பிரதேசத்தில் 3 வயது தலித் சிறுமி எரித்து கொல்லப்பட்ட சம்பவம், மேலும் இந்தியாவின் கோர முகத்தை உலகிற்கு காட்டுவதாகவே உள்ளது.
 
ஐபிஎல் முறைகேடுகளில் சிக்கி அமலாக்கப் பிரிவால் தேடப்பட்டு வரும், தலைமறைவாக வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள லலித் மோடிக்கு உதவிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மீதும், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? தனிப்பெரும்பான்மை இருக்கின்ற மமதையா?
 
இந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மறுத்ததால் எதிர்கட்சிகளால் நாடாளுமன்றம் முடக்கப்பட்டபோது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தீர்களா? நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற எதிர்கட்சிகளின் கோரிக்கைகளை கொஞ்சமாவது மதிப்பளித்து கேட்டீர்களா?
 
ஆளும் கட்சியானது, எதிர்கட்சிகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதே ஜனனாயகம். அவர்களையும் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பியிருப்பது உங்களை தேர்ந்தெடுத்த அதே இந்திய மக்கள் தான் என்பதை மறந்துவிட வேண்டாம்.

 
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.......

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசர சட்டமாக பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன? ஏழை விவசாயிகளை பாதிக்கும் சட்டம் எதற்கு? ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கொண்டுவந்ததை கடுமையாக எதிர்த்த நீங்கள்தான் இன்று பேருக்கு சில மாற்றங்களை செய்து, விவசாயிகளை பாதிக்கு இந்த சட்டத்தை அமல்படுத்த துடிக்கிறீர்கள். அதன் நோக்கம் என்ன? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?
 
உயிர் வாழ வயிற்றுக்கு உணவளிக்கும் விவசாயத்தை அழித்துவிட்டு எதை சாப்பிட போகிறோம், பணத்தையா?. வளர்ச்சி திட்டங்களை விட நாட்டின் விவசாயமும், விவசாயிகளும் முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்!
 

 
இந்து பெண்கள் ஐந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என மத்திய அமைச்சரின் பேச்சு, இஸ்லாமியர்களின் மக்கள் தொகை வளர்ச்சி நாட்டிற்கு ஆபத்து என இந்து அமைப்புகளின் பேச்சு, ராமருக்கு பிறந்தவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் மற்றவர்களுக்கு இங்கு இடம் கிடையாது என்ற பேச்சு, 3 வயது சிறுமியை எரித்துக்கொன்ற சம்பவத்தை நாயுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதிய ஜனதா உறுப்பினர்களும், இந்து அமைப்புகளும் தொடர்ந்து கூறிய வண்ணமே உள்ளது. இவற்றை கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை.
 
சர்ச்சைக்குறிய முறையில் கருத்து தெரிவித்துவிட்டு, பின்னர் மன்னிப்பு கேட்பதையே வாடிக்கையாக உள்ளார்கள் அமைச்சர்கள். பிரதமர் மோடி, இதில் தலையிட்டு இவர்களின் வரம்பு மீறிய பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் மௌனம் காப்பது ஏன்?
 
பிரதமர் மோடியை இலங்கை விவகாரத்தில் விமர்சித்த வைகோவுக்கு தொலைக்காட்சி மூலமாக பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பிரதமர் என்பவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா? இல்லை கட்சியினருக்கு விமர்சனங்களை தாங்கி கொள்ளும் சகிப்புத்தன்மை இல்லையா?
 
தமிழக சட்டப்பேரவையில் இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை என்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை துளியளவும் மதிக்காமல் ஐக்கிய நாடுகள் சபையில் மௌனம் காத்தது ஏன்? 7 கோடி தமிழக மக்களின் கோரிக்கையை நிராகரித்தது ஏன்? இது தான் கூட்டட்சி தத்துவமா?
 

மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.......



 

 
காஷ்மீர் பிரச்சனையில் இருக்கும் அனுகுமுறை தமிழக மீனவர் மற்றும் இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் இருப்பதில்லையே ஏன்? தமிழக அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக கட்சத் தீவு இலங்கை அரசுக்கு சொந்தமானது என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள் எப்படி தமிழக மீனவர்கள் நலனில் அக்கறை கொள்ள முடியும்? கட்சத் தீவு தான் அவர்களின் கோரிக்கையும் வாழ்வாதாரமும் என்பது மத்திய அரசுக்கு தெரியாதா?
 

 
பகவத் கீதையே தேசிய நூல் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியது இந்தியாவில் வாழும் பிற மதத்தினரை புண்படுத்தாதா? மத்திய அரசு ஊழியர்கள் இந்தியில் கையெழுத்திட வேண்டும், இந்தி மொழி தேசிய மொழியாக மாற்ற வேண்டும் என அவ்வப்போது எழுந்து வரும் சர்ச்சை கருத்துக்கள் தொடர்வது ஏன்? மற்ற மொழிபேசும் மக்களிடம் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்துவது ஏன்? இந்தியை விட சிறந்த மொழி இந்தியாவில் இல்லையா?
 
அதிக மக்கள் பேசும் மொழி என்ற ஒரே காரணத்துக்காக இந்தியை எப்படி தேசிய மொழியாக்க முடியும். மொழி வளம், வரலாறு, தகுதி, தொன்மை, இலக்கிய படைப்புகள் நெறிமுறைகள் வேண்டாமா?. தமிழுக்கு ஈடு இணையான மொழி ஏதேனும் உண்டா, இப்படிப்பட்ட பல வளமையான மொழி இருக்கையில் இந்தியை முன்னிலைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?
 
விலைவாசி உயர்வை காரணம் காட்டி பிரச்சாரம் செய்தவர்களே, உங்கள் ஆட்சியில் அதை கட்டுப்படுத்த ஏதேனும் நடவடிக்கை எடுத்துளீர்களா? வெங்காய விலை உயர்வு, தட்டுப்பாடு முடிவதற்குள் பருப்பு விலை உயர்வு, தட்டுப்பாடு.
 
’முன்கூட்டியே மாநில அரசுகளை எச்சரித்தோம். இந்த விலையேற்றத்துக்கு மாநில அரசுகள் தான் காரணம்’ என மாநில அரசின் மீது பழிபோடும் மத்திய அரசே மாநில அரசை முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பதுடன் உங்கள் கடமை முடிந்துவிட்டதா? குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு பதுக்கலை கண்டுபிடிக்க முற்படலாமே?
 
இந்துத்துவா அமைப்புகள் எழுத்தாளர்கள் மீது தொடுக்கும் தாக்குதலும், வன்முறைகளும் மிகவும் கண்டிக்கத்தக்கது. நாட்டில் நிலவும் மதவாத, இனவாத போக்கை கண்டித்து சாகித்ய விருதுகளை எழுத்தாளர்கள் திருப்பி அளிப்பதை, அரசு உற்றுநோக்குகிறதா? எதையும் கண்டுகொள்ளாமல் இந்த அசாதரணமான சூழலை மாற்ற பிரதமர் மௌனம் கலைக்காமல் இருப்பது ஏன்?
 
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தாய் மதம் திரும்புதல் என்ற பெயரில் மதமாற்றம் செய்த இந்து அமைப்புகளின் நடவடிக்கைகளை கைகட்டி வேடிக்கை பார்த்தது ஏன்?
 
எதிர்கட்சிகள்:
 
நிலக்கரி சுரங்க ஊழல், 2ஜி அலைக்கற்றை முறைகேடு என முக்கிய பிரச்சனைகளில் சிக்கிய எதிர்கட்சிகள், ஆளும் கட்சியை எதிர்க்கும் வலுவான சக்தியாக செயல்படவில்லை. நாடளுமன்றத்தை முடக்குவதையே முக்கிய குறிக்கோளாக கொண்டிருந்த அவர்கள் மக்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் விவாதித்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
 
மக்களை ஈர்க்கும் வகையில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் எதிர்கட்சிகள் ஈடுபடவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. காங்கிரஸ், அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ் என ஆளுக்கொரு பக்கம் நிற்கும் எதிர்கட்சிகள் ஒற்றுமையில்லாமல் இருப்பதே மேற்கூறிய அனைத்து அத்து மீறல்களுக்கும் காரணமாக இருக்குமோ என நினைக்க தோன்றுகிறது. எதிர்த்து நின்று தட்டி கேட்க, தடையோ வலுவான எதிர்கட்சிகள் இல்லை என்ற நினைப்பு கூட இந்த செயல்பாடுகளுக்கு காரணமாக இருக்கலாம்.
 
’இக்கரைக்கு அக்கரை பச்சை’. காங்கிரசுக்கு மாற்றாக பாரதீய ஜனதா கட்சியை கொண்டு வந்தோம். இப்பொழுது இவர்களுக்கு மாற்றாக யாரை கொண்டுவருவது என்ற சிந்தனைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டேனே என நினைக்கும் போது தேசம் குறித்த கவலை மேலும் அதிகரிக்கிறது.... எப்போது விடியல் இந்த விடை தெரியாத பயணத்தில்.............