வாஷ் அவுட்டான சன்னி லியோனின் ஒன் நைட் ஸ்டேன்ட்
வாஷ் அவுட்டான சன்னி லியோனின் ஒன் நைட் ஸ்டேன்ட்
சன்னி லியோன் நடிப்பில் சென்ற வாரம் வெளியான, ஒன் நைட் ஸ்டேன்ட் திரைப்படம் உள்நாடு, வெளிநாடு என்று சகல இடங்களிலும் வாஷ் அவுட் ஆகியுள்ளது.
சன்னி லியோனின் நீலப்பட பின்னணி காரணமாக இந்தியாவில் அவருக்கு செலிபிரிட்டி அந்தஸ்து தரப்பட்டது.
முக்கியமாக இந்திப்பட உலகில் சன்னி ஒரு செல்லப்பிள்ளையாக உலவி வந்தார். அவரது கவர்ச்சியை முதலீடாக்கி கலெக்ஷன் பார்க்கலாம் என்ற பைபாஸ் புத்தி பலருக்கும் இருந்தது. அவர்கள்தான் சன்னி லியோனை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தனர்.
ஒன் நைட் ஸ்டேன்ட் படத்தையும் ஆபாசமான வசனங்கள், கிளுகிளுப்பான போஸ்டர்கள் என அடல்ஸ் ஒன்லி பாணியில் விளம்பரப்படுத்தியிருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்ற வாரம் வெளியான இப்படம் முதல்நாள் வெள்ளிக்கிழமை 75 லட்சங்களையும், சனிக்கிழமை 70 லட்சங்களையும், ஞாயிறு 80 லட்சங்களையும் வசூலித்தது.
மொத்தமாக முதல்வார இறுதி வசூல் 2.25 கோடிகள் மட்டும். திங்கள் முதல் வசூல் படுபாதாளத்துக்கு இறங்கியுள்ளது.
வெளிநாடுகளில் இந்தளவு வசூல்கூட படத்துக்கு கிடையாது, வாஷ் அவுட் என கலெக்ஷன் ரிப்போர்ட்கள் தெரிவிக்கின்றன.