1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Suresh
Last Updated : சனி, 27 ஜூன் 2015 (14:38 IST)

சினிமாவிலும் சிக்கல் - தள்ளிப் போகிறது டோனி குறித்த படம்

டோனியின் வாழ்க்கை வரலாறை, டோனி - த அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் எடுத்து வருகின்றனர். இதில் டோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார்.


 

 
இந்தப் படத்தை அக்டோபர் 22 வெளியிடுவதாக இருந்தனர். இப்போது திடீரென்று படவெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த திடீர் தாமதத்துக்கான காரணம் தெரியவில்லை.
 
வங்கதேசத்திடம் இந்திய அணி சரித்திர தோல்வி சந்தித்திருக்கும் இந்த நேரத்தில், டோனியும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.
 
என்னால்தான் தோல்வி என்றால் கேப்டன் பதிவியைவிட்டு விலகத் தயார் என அவர் கூறும் அளவுக்கு மோசமானது நிலைமை.
 
இப்படியொரு நேரத்தில் டோனியை குறித்த படத்தின் வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. டோனி வெற்றி முகத்தில் இருக்கையில் படத்தை வெளியிடலாம் என்று நினைத்திருப்பார்களோ?