திங்கள், 18 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 4 நவம்பர் 2016 (13:03 IST)

சன்னி லியோனுக்கு இப்படியும் ஒரு முகமா??

சன்னி லியோன் நடிகையாக மட்டுமல்லமால் பிஸ்னஸ் வுமென் ஆக    பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்துவருகிறார். 

 
இன்றைய வியாபரமயமான உலகில் சினிமா நடிகை, நடிகர்கள் திரைப்படங்களையும் தாண்டி மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் அமிதாப் பச்சான் ஒரு மிகப்பெரிய வியாபாரி. 
 
சன்னி லியோன் சரியான முறையில் ஆய்வு செய்து தான் சம்பாதித்த பணத்தை அதிகளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார். அதுவும் இந்தியாவில் அமெரிக்கப் பங்குச்சந்தையில். 
 
அவருடைய முதலீடு பெரும்பாலும் மியூச்சுவல் பண்ட், பங்குகளில் செய்துள்ளார். இதில் பெரும் பகுதி சொந்த பிர்பியூம் மற்றும் டியோ பிரான்டான LUST நிறுவனத்தில் செய்துள்ளார். 
 
பொழுதபோக்குத் துறையில் தன்னுடைய 18வது வயதில் முதல் வர்த்தகத்தைத் துவங்கினார், அப்போதே அவருடைய எல்லா முதலீடும் அவருடைய நிறுவனத்திலேயே செய்து வந்தார். இது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது.
 
நிறுவனத்தின் வளர்ச்சிக்காக HTML கற்றுக்கொண்டார். இதனால்  நிறுவனத்திற்கான இணையதளத்தை தானே உருவாக்கினார். மேலும் போட்டி எடிட்டிங் கற்றுக்கொண்டார். 
 
சினிமா மற்றும் பொதுப்போக்குத் துறையில் சம்பாதித்த பணத்தை இணையதள வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார். முதலீட்டில் 40 சதவீதம் பங்குகளிலும், 30 சதவீதம் ரியல் எஸ்டேட் மற்றும் நிலத்தை வாங்குவதிலும், மீதமுள்ள 30 சதவீதம் தங்கத்தில் முதலீடு செய்கிறார்.
 
மேலும் முதலீட்டின் பெரும் பகுதி அமெரிக்கச் சந்தையில் உள்ள மியூச்சுவல் பண்ட் மற்றும் பங்குகளில் தான் முதலீடு செய்கிறார்.
 
முதலீடு என்றால் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் தான். தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வதை விடவும் தங்கம் பத்திரங்களில் முதலீடு செய்தால் லாபம் மற்றும் பாதுகாப்பு அதிகம் எனத் தனது முதலீடு வாழ்க்கை மற்றும் வழக்கத்தைப் பற்றிக் கூறினார். 
 
ஓய்வு பெறும் போது நிதி தேவைக்காக யாரிடமும் நிற்கக் கூடாது என்பதற்காகவும் நிலையான வாழ்க்கை முறையைப் பெற அமெரிக்காவில் புகழ் பெற்ற IRA (Individual Retirement Account) திட்டத்தில் முதலீடு செய்துள்ளார்.
 
மேலும் உடல்நலத்தைப் பாதுகாக்க அமெக்காவில் ஒபாமாகேர் மற்றும் சில தனியார் நிறுவனத்தில் சுகாதாரக் காப்பீட்டு எடுத்துள்ளார். சன்னி லியோன் BMW 7 சீரியஸ் காரை வைத்துள்ளார். அதற்கும் அவர் இன்சூரன்ஸ் செய்துள்ளார்.