1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2016 (11:58 IST)

அந்த காட்சிகள் வெளியானதில் எனக்கு ஒன்றும் கவலையில்லை சொல்லும் ராதிகா ஆப்தே

அந்த காட்சிகள் வெளியானதில் எனக்கு ஒன்றும் கவலையில்லை சொல்லும் ராதிகா ஆப்தே

கபாலி படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. சமீபத்தில் ராதிகா ஆப்தேயின் நிர்வாண வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. அது, பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷயப்பின் குறுப்படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் எனக்கூறப்பட்டது.



20 நிமிடங்கள் ஓடும் அந்த குறும்படம் இன்னும் ரிலீஸாகவில்லை. சர்வதேச மார்க்கெட்டில் மட்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் அந்த குறும்படத்தில் இருந்து ஒரு காட்சி இணைய தளத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
 
இவர் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் தயாரிப்பில் லீனா யாதவ் இயக்கத்தில் ‘பார்ச்டு’ என்ற இந்திப்படத்தில் ஹூசைனுடன் தோன்றும் நிர்வாணக் காட்சிகள் வெளிவந்தன, இவை யாவும் வணிக தந்திரம்’ எனவும் விமர்சனங்கள் எழுந்தன.
 
இதுபற்றி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ராதிகா ஆப்தே இது எனக்கு வருத்தம் தரவில்லை. அந்த காட்சிகள் வெளியானதால் நான் உடைந்து போக வில்லை. இதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படவும் மாட்டேன் என கூறினார்.
 
இதனை தொடர்ந்து வெளியான காட்சிகள் முன்கூட்டியே கசிந்த காட்சிகள் அல்ல, இந்தப் படம் ஏற்கனவே வெளிநாடுகளில் வெளியாகி விட்டது எனவும் அவர் குறிப்பிட்டார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், இந்தியாவில் 23–ந் தேதி வெளியாகிறது.