ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Ilavarasan
Last Updated : வியாழன், 4 செப்டம்பர் 2014 (16:42 IST)

டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படும் சல்மான் கானின் படம்

பக்கா கமர்ஷியல் படங்களில் நடிக்கும் பாலிவுட் ஸ்டார்கள் அவ்வப்போது அருமையான கலைப் படங்களையும் தயாரிப்பார்கள். அமீர் கான் இதில் முன்னோடி என்றால் பின்னோடி, சல்மான் கான்.


 
 
கிக் போன்ற மசாலாக்களில் புரளும் சல்மான் தயாரித்துள்ள இந்தோ -கனடியன் படம், Dr. Cabbie. இந்தப் படத்தைப் பொறுத்தவரை சல்மான் தயாரிப்பாளர் மட்டுமே.
 
படம் முடிந்து கனடாவில் ஸ்பெஷலாக சல்மான் கானுக்கு படம் திரையிடப்பட்டது. படத்தை ரசித்துப் பார்த்தவர் அடுத்த நாளும் படத்தைப் பார்த்தார். ஒரு படத்தை இரண்டுமுறை அதுவும் அடுத்தடுத்து சல்மான் பார்ப்பது இதுவே முதல்முறையாம். டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுகிறது.