1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Caston
Last Updated : செவ்வாய், 14 ஜூன் 2016 (18:18 IST)

ராய் லட்சுமி பிகினி காட்சியில் நடிக்க 10 கிலோ எடையை குறைத்தார்!

லட்சுமி ராய் என சினிமாவில் அறிமுகமாகி ராய் லட்சுமி என தன் பெயரை மாற்றி அவ்வப்போது கவர்ச்சியில் ரசிகர்களை கலங்கடிக்கும் அவர் தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த படத்தில் பிகினி காட்சியில் நடிக்க அவர் 10 கிலோ எடையை குறைத்துள்ளார்.


 
 
ஜூலி-2 என்னும் படம் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் ராய் லட்சுமிக்கு இது 50-வது படம். இந்த படத்தில் தான் தன்னுடைய முழு கவனமும் தற்போது இருப்பதாகவும், இந்த படத்தில் இடம்பெறும் பிகினி காட்சியில் நடிக்க 2 மாதத்தில் 10 கிலோ எடையை குறைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெறவுள்ளது. முக்கியமான காட்சிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் எடுக்கவும் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ராய் லட்சுமி டாப்லெஸ் காட்சியில் கலக்கும் புகைப்படம் பாலிவுட்டை கலக்கி வருகிறது.