1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: புதன், 10 டிசம்பர் 2014 (11:08 IST)

பிரபுதேவா படம் - ஆக்ஷன் இருக்கு கலெக்ஷன் இல்லையே

முதலிரண்டு படங்களில் கிடைத்த பெயரை வேகமாக இழந்து வருகிறார் பிரபுதேவா. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அவரது ஆக்ஷன் ஜாக்சனும் பாக்ஸ் ஆபிஸில் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது.
டிசம்பர் 5 வெளியான இப்படம் 45 முதல் 50 சதவீத பார்வையாளர்களையே பெற்றது. வெளிநாடுகளிலும் நிலைமை மோசம். ஐக்கிய அரபு நாடுகளில் இந்திப் படங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. முதல்வார இறுதியில் ஆக்ஷன் ஜாக்சன் போன்ற படம் ஆறு ஏழு கோடிகளை அனாயாசமாக வசூலிக்கும். ஆனால் இந்தப் படம் 3.02 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது.
 
யுகே மற்றும் அயர்லாந்தில் முதல் மூன்றுநாள் வசூல் சுமாராக 49.95 லட்சங்கள்.
 
ஆஸ்திரேலியாவில் 22.92 லட்சங்கள். நியூசிலாந்தில் 8.26 லட்சங்கள். மலேசியாவில் 3.59 லட்சங்கள்.
 
எப்படிப் பார்த்தாலும் அஜய்தேவ் கான் படத்துக்குரிய வசூல் இல்லை என்பதுதான் நிபுணர்களின் கருத்து.