1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2017 (16:28 IST)

இந்த நடிகையை கல்யாணம் செய்தது எனது சாபம்: புலம்பும் இயக்குநர்

உன்னை திருமணம் செய்ததன் மூலம் கடவுள் என்னை சபித்துவிட்டார் என இயக்குநர் ஆதித்யா சோப்ரா தனது மனைவி ராணி முகர்ஜியிடம் அடிக்கடி கூறுவாராம்.



 

 
பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி இயக்குநர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஆதிரா என்ற பெண் குழந்தை உள்ளது. அண்மையில் ஆதிராவின் புகைப்படம் வெளியாகி வைரலானது. இதுகுறித்து ராணி முகர்ஜி கூறியதாவது:-

உன்னை திருமணம் செய்ததன் மூலம் கடவுள் என்னை சபித்துவிட்டார் என அடிக்கடி ஆதித்யா கூறுவார். என் மகள் ஆதிராவின் புகைப்படங்கள் வெளியாவதில் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் அது அவளின் தந்தைக்கு அதில் இஷ்டம் இல்லை. நான் ஆதியின் உணர்வுகளை மதிக்கிறேன்.

என் ரசிகர்கள் ஆதிராவை பார்க்க ஆசைப்படுகிறார்கள். அவருக்கு மீடியா கண்ணில் படாமல் வாழ ஆசை. ஆதிரா கைக்குழந்தையாக இருப்பதால் அவளின் புகைப்படத்தை தற்போது வெளியிட வேண்டாம் என நினைக்கிறார் ஆதித்யா, என்றார்.