1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Geetha priya
Last Modified: சனி, 10 மே 2014 (11:26 IST)

கவர்ச்சிக்கு மனைவியை பயன்படுத்தும் அர்பாஸ் கான்

பாலிவுட்காரர்களுக்கு பரந்த மனசு. கவர்ச்சி நடனத்துக்கு மனைவியை தாரைவார்க்கும் அளவுக்கு தாராளம் கொண்டவர்கள். 

ஒருகாலத்தில் கவர்ச்சி நடனத்தில் மலைகா அரோரா கொடிகட்டிப் பறந்தார். பிறகு நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், சல்மான் கானின் சகோதரருமான அர்பாஸ் கானை மணந்து குழந்தையும் பெற்றுக் கொண்டார். ஆனால் தோற்றத்தில் இன்னும் அதே கவர்ச்சி டாலடிக்கிறது.
அர்பாஸ் கான் இயக்கும், தயாரிக்கும் பல படங்களில் மலைகா அரோராதான் கவர்ச்சி நடனம். தபாங் படத்திலும் மலைகா ஆடினார். பாடல் பம்பர் ஹிட்.
 
தனது அடுத்தப் படத்தில் கவர்ச்சி நடனம் ஆட தனது மனைவியை கேட்க இருப்பதாக அர்பாஸ் கான் கூறியுள்ளார். இந்தப் படத்தில் சோனம் கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். 
 
எல்லாம் நல்லபடியாக நடந்தால் ஜுன் மாதம் மலைகா அரோரா கவர்ச்சி நடனம் ஆடுவார் என்று அர்பாஸ் கான் கூறியுள்ளார்.