1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 6 அக்டோபர் 2016 (17:19 IST)

நடிகர்கள் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளக் கூடாது

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் நடிகர்கள் கலந்துக்கொள்ளக் கூடாது என்று பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் கோரிக்கைவிடுத்துள்ளது.


 

 
வடமாநில தொலைக்காட்சிகளில் பிரபலமான ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகள் மெல்ல மெல்ல தென் இந்தியாவில் பரவி வருகிறது. இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள் நடுவர்களாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்கின்றனர்.
 
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பு, கன்னட நடிகர்கள் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளது. 
 
மேலும் இந்த நிகழ்ச்சிகள் கன்னட் சினிமாவுக்கு பாதகமாக அமைவதாகவும் தெரிவித்துள்ளது.