1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Modified: வியாழன், 12 மே 2016 (17:34 IST)

தூம் 4 - வில்லன் சல்மானுடன் இணையும் ரன்வீர் சிங்

தூம் 4 - வில்லன் சல்மானுடன் இணையும் ரன்வீர் சிங்

இந்தியாவில் தயராகியுள்ள பட சீரிஸில் முதலிடத்தில் இருப்பது தூம் சீரிஸ்தான். இதுவரை 3 பாகங்கள் வெளியாகியிருக்கிறது.


 


மூன்று பாகங்களும் ஹிட். 
 
தூம் சீரிஸில் ஹிர்த்திக் ரோஷன், அமீர் கான் ஆகியோர் வில்லனாக நடித்திருக்கிறார்கள். கதைப்படி வில்லனுக்குதான் முக்கியத்துவம். அபிஷேக் பச்சன் போலீஸ் அதிகாரியாக மூன்று பாகங்களிலும் நடித்துள்ளார். 
 
நான்காவது பாகத்தை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்க, ஆதித்ய சோப்ரா தயாரிக்கிறார். வில்லனாக நடிக்க சல்மான் கானிடம் பேசியுள்ளனர். முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க ரன்வீர் சிங்குடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
 
விரைவில் முடிவு தெரியவரும்.