செவ்வாய், 11 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha
Last Updated : வெள்ளி, 20 மார்ச் 2020 (11:25 IST)

காதல் தோல்வியால் கான்சென்ட்ரேட் பண்ணமுடியலயா? ராஜமௌலி படத்திலிருந்து வெளியேறும் ஆலியா பட் !

"பாகுபலி' போன்ற பிரம்மாண்ட படத்தை அடுத்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'.  இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு பட ஹீரோக்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக ஆலியாபட், மற்றும் ஹாலிவுட் நடிகை டெய்ஸி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமானதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர் டெய்ஸி  தவிர்க்க முடியாத காரணத்தால் படத்திலிருந்து விலகினார். 
 
இதையடுத்து அலியாபட்டிற்கு சிறந்த ரோல் கொடுக்கப்பட்டிருக்கும் என பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகை ஆலியா பட் ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து வெளியேறவுள்ளார் என செய்திகள் பரவி வருகிறது. இயக்குனர் ராஜமௌலி படத்தில் தலைகாட்ட ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று கதாநாயகிகள் தவம் கிடக்கும் நிலையில் ஆலியாவிற்கு அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு தேடி வந்ததும் இப்போது வேண்டாமென்று விலகியதை அறிந்த திரையுலகினர் முணுமுணுத்து வருகின்றனர். 
 
மேலும் கடந்த இரண்டு நாட்களாக ஆலியா பட் - ரன்பீர் கபூர் இருவரும் பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அந்த மன உளைச்சலால் தான் படத்தில் சரியாக நடிக்கமுடியாது என கருதி வெளியேறினாரோ என கிசு கிசுக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் கொரோனா காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு துவங்கும் போது கால்ஷீட் பிரித்து வழங்குவதில் பெரிய  சிக்கல் ஏற்படும் என்பதால் தான் வெளியேறி உள்ளார் என அவரது நெருங்கிய வட்டாரம் தெரிவிக்கிறது.