பில் கிளிண்டனின் பாலியல் வரலாற்றை டிரம்ப் கிளறுவாரா?


லெனின் அகத்தியநாடன்| Last Modified திங்கள், 10 அக்டோபர் 2016 (19:51 IST)
அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் தொலைக்காட்சி விவாதத்தில், பெருங்கோடீஸ்வர வர்த்தகரான டொனால்ட் டிரம்ப் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் பாலியல் வரலாற்றை பயன்படுத்தக்கூடும் என்று டிரம்பின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.
 
2005 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்பும் மேலனியாவும் திருமணம் செய்து கொண்டனர்
 
டிரம்ப் மற்றும் ஹிலாரி இருவரின் அந்தரங்க வாழ்க்கையிலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகள் உள்ளன என்று ரூடி ஜூலியானி தெரிவித்திருக்கிறார்.
 
பெண்கள் பற்றிய டிரம்பின் கீழ்த்தரமான கருத்துக்களால் எழுந்த கண்டனங்களுக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
 
பெண்கள் பற்றி டிரம்ப் கீழ்த்தரமாகப் பேசுகின்ற ஒரு தகாப்தக் காலத்திற்கு முந்தைய காணொளி பதிவு வெளியாகிய பின்னர், 20க்கும் மேலான மூத்த குடியரசு கட்சி உறுப்பினர்களின் ஆதரவை டிரம்ப் இழந்துள்ளார்.
 
அதில் சிலர் அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதில் இருந்து டிரம்பை விலக கோரியுள்ளனர்.

இதில் மேலும் படிக்கவும் :