1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : புதன், 15 மே 2019 (18:16 IST)

தனுசு - வைகாசி மாதப் பலன்கள்

(மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்) - மற்றவர்களின் ஆலோசனையை தட்டாத தனுசு ராசியினரே நீங்கள் எடுக்கும் முடிவுகள்  தீர்க்கமானதாக இருக்கும். இந்த மாதம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை  நிகழ்ச்சியில்   கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம்  ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.
குடும்பத்தில் இதமான  சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி  கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.
 
தொழில் வியாபாரம் நன்றாக  நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள்  வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள்.  எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும்.
 
கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவீர்கள். ஆடை ஆபரணங்கள் சேரும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும்.
 
அரசியல்துறையினருக்கு பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
 
பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். மாணவர்கள் புத்தி  சாதூரியத்துடன் நடந்து கொண்டு  மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.
 
மூலம்: இந்த மாதம் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். உங்களின் உடமைகள் மீது கண்ணும், கருத்துமாக இருக்க வேண்டும். புதிய  நண்பர்கள் கிடைப்பார்கள். அறிமுகம் இல்லாதவர்களின் வீட்டில் எதையும் உட்கொள்ள வேண்டாம்.
 
பூராடம்: இந்த மாதம் நீங்கள் அமைதியாக இருந்தாலும் வீண் சண்டைகள் மற்றும் வீணான குழப்பங்கள் உங்களைத் தேடி வர வாய்ப்பு  இருக்கிறது. தகுந்த வரன் கிடைத்து திருமணம ஏற்பாடு இனிதே நடந்தேறும். வீடு, நிலம் மற்றும் வாகனங்கள் வாங்கலாம்.
 
உத்திராடம் 1ம் பாதம்: இந்த மாதம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனாலும் கவனமுடன் நடந்து கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள்  சாதகமாக அமையும். சிலர் கல்வி பயில வெளியூர்க்கு செல்ல வேண்டி வரும்.
 
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன்: 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: மே: 31; ஜூன்: 1, 2
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம்  அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி.