1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (15:18 IST)

மார்ச் 2021 மாத ஜோதிடப் பலன்கள்: சிம்மம்

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் 1ம் பாதம்)

 
இயல்பிலேயே மற்றவர்களை அதிகாரம் செய்வதில் பிரியமுடைய சிம்மராசியினரே, இந்த மாதம் வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
 
தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. 
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல்  பணியாற்ற  வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு,   ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
 
குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம்.  பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை.
 
கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
 
அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். 
 
பெண்களுக்கு  மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
 
மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில்  செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.
 
மகம்:
இந்த மாதம் புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். 
 
பூரம்:
இந்த மாதம் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். 
 
உத்திரம் - 1:
இந்த மாதம் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும். 
 
பரிகாரம்:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15
அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8