திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 16 டிசம்பர் 2022 (07:33 IST)

மார்கழி மாத ராசி பலன்கள் 2022 – மிதுனம்

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)


கிரகநிலை:
தைரிய வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது  - சப்தம ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்கிரன்  - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:
30-12-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
எந்த பிரச்சனைகள் வந்தாலும், எதிர்த்து நின்று சமாளிக்க கூடிய ஆற்றல் பெற்ற மிதுன ராசியினரே, இந்த மாதம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம்  மனஸ்தாபம் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக் கிடையே  சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரத்தில் தாமதம் இருக்கும்.

கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில்  அக்கறை தேவை.

திருவாதிரை:
இந்த மாதம் வேற்று மொழி பேசும் நபரால்  நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனகுழப்பம் தீரும். வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக  பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக  காணப்படும்.  திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். 

பரிகாரம்:  திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
சந்திராஷ்டம தினங்கள்: டிச 25, 26
அதிர்ஷ்ட தினங்கள்: டிச 19, 20