வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By

மிதுனம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

(மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்): நல்ல தீர்க்கமான சிந்தனையும், அறிவாற்றலும், நினைவாற்றலும் கொண்ட மிதுனராசி நேயர்களே! இந்த மாதம் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். 

மணவயதை அடைந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.
 
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். இதுவரைபட்ட கஷ்டநஷ்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். பணம் பலவழிகளில் தேடிவருவதால் பொருளாதாரநிலை மிகமிகச்சிறப்பாக இருக்கும்.
 
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு அபரிதமான லாபமும், நல்ல வளர்ச்சியும் உண்டாகும். இதுவரை இருந்து வந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள், கஷ்டநஷ்டங்கள் அனைத்தும் விலகும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள்.
 
உத்தியோகஸ்தர்கள் பணியில் உற்சாகமாகச் செயல்படுவார்கள். உங்கள் திறமைக்கேற்ற பாராட்டுதல்களும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகளால் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். சிலருக்குத் தடைப்பட்ட இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் யோகம் உண்டாகும்.
 
பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பணவரவுகள் தாராளமாக அமையும். கடன்கள் குறையும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகமும், சிறப்பான புத்திர பாக்கியமும் உண்டாகும்.
 
அரசியல்வாதிகளின் பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். முயற்சிகளில் எந்தவொரு தடையும் இல்லாமல் வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த தலைமைப் பதவிகளும் கிடைக்கும். புகழின் உச்சிக்கே செல்வீர்கள். உங்களின் செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். மக்களின் ஆதரவு பெருகும்.
 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத் தட்டும். உங்களை வேண்டாம் என புறக்கணித்தவர்களும் வாய்ப்புகளை வாரி வழங்குவார்கள். நீங்கள் நடித்த படங்களும் வசூலில் முதலிடம் வகிக்கும்.
 
மாணவர்கள் கல்வியில் திறம்படச் செயல்பட்டு மதிப்பெண்களைச் சிறப்பாகப் பெறுவார்கள். மேற்கல்வியிலும் புதிய சாதனைகள் செய்யும் வாய்ப்பு அமையும். விளையாட்டுத்துறைகளிலும் மாகாண அளவில் வெற்றி பெற்று தங்கள் பள்ளி, கல்லூரிகளுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.
 
மிருகசீரிஷம் - 3, 4: இந்த மாதம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
 
திருவாதிரை: இந்த மாதம் திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படலாம். ஆன்மீக நாட்டம் மனதிற்கு நிம்மதியைத் தரும். குல தெய்வ தலங்களுக்கு சென்று வருவது மனதிற்கு அமைதியைத் தரும். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.
 
புனர்பூசம் - 1, 2, 3: இந்த மாதம் உங்கள் வியாபாரத்தை சீரமைப்பதற்கு சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். காரிய அனுகூலம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவருகள் உங்களுக்கு உதவுவார்கள். லாபம் அதிகரிக்கும். விற்பனை அமோகமாகும். 
 
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.
 
அதிர்ஷ்ட தினங்கள்: Nov 6, 7, 8
 
சந்திராஷ்டம தினங்கள்: Oct 18, 19; Nov 14, 15.