செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (15:43 IST)

பிப்ரவரி 2020 மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)


கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி, கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்ரன் - அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றம்:
04-02-2020 அன்று 6.36 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-02-2020 அன்று காலை 5.13 மணிக்கு செவ்வாய் பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
காரியங்களில் தாமதங்களை சந்திக்கப் போகும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த  மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து  முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சாப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல்  ஒதுங்கி சென்று விடுவது நல்லது. மற்றவர்களுக்கு உதவும் போது கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் கீழ் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம்  உண்டாகலாம். நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மை தரும்.  பழைய பாக்கிகளை  வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சால் மேல்  அதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களை தேடி  வரலாம். சக ஊழியர்களிடம் உங்கள் மதிப்பு மரியாதை உயரும்.

குடும்பச் செலவுகள் கூடும்.  கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பம் பற்றிய கவலைகள்  உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை  பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை. பிள்ளைகள் தங்களை அனுசரித்து செல்வார்கள்.

பெண்களுக்கு புதிய தொடர்புகள் மூலம் லாபம் உண்டாகும். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணகூடுதலாக உழைக்க  வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். போட்டிகளில் பரிசுகளை அள்ளுவீர்கள். 

கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

அரசியல் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்தக் கொள்முதலையும் தயக்கமின்றிச் செய்யலாம். வியாபாரம் பெருகும். போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும்.

ரோகிணி:
இந்த மாதம் உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும். எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணவரத்து அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்குவதால்  வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், புதன்
சந்திராஷ்டம தினங்கள்: 19, 20,
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13