கும்பம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்): உயர்ந்த பண்பும், நிறைந்த பொறுமையும், எல்லாரிடத்திலும் அன்பாகப் பழகக்கூடிய தன்மையும் கொண்ட கும்ப ராசி நேயர்களே! 
இந்த மாதம் செல்வம், செல்வாக்கு உயரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவரும்.
 
குடும்ப வாழ்வில் குதூகலமும், பூரிப்பும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யமான உறவு இருக்கும். புத்திரர்களால்  மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தாராள தனவரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும்.  திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். உடன்பிறப்புகள் தக்கசமயத்தில் உதவுவார்கள். வீடு, மனை,  வண்டி, வாகன யோகங்கள் அமையும். உற்றார்-உறவினர்கள் பிரச்சினைகளை மறந்து ஒற்றுமை பாராட்டுவார்கள்.
 
தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சில போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை மேன்மையாக அபிவிருத்தி செய்யமுடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தையும், வெற்றியையும்  பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பும் நல்ல மேன்மையை ஏற்படுத்தும்.
 
உத்தியோகஸ்தர்கள் அனுகூலமானபலனை அடைவார்கள். தடைப்பட்ட பதவிகளும் கிடைக்கப்பெற்று கௌரவமானநிலைகள் ஏற்படும்.  உங்களின் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டு உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வுகளும்  கிடைக்கப்பெறும்.
 
பெண்களுக்கு குடும்ப வாழ்வில் இருந்த பிரச்சினைகள் விலகி கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியமும்  அற்புதமாக அமையும். திருமண வயதை அடைந்த மங்கையருக்கு திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொருளாதார நிலையும்  சிறப்பாக இருப்பதால் கடந்தகால கடன்கள் யாவும் விலகி கண்ணியமிக்க வாழ்க்கை அமையும்.
 
அரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு உயரக்கூடிய காலமாகும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.  கௌரவமிக்க மாண்புமிகு பதவிகள் கிடைக்கும். மக்களின் ஆதரவுகள் அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். முயற்சிகள்  அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும்.
 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவந்து கதவைத்தட்டும். தடைப்பட்ட பணவரவுகள் யாவும் தடையின்றிக் கிடைக்கும். தொழிலில்  இருந்த போட்டி பொறாமைகள் விலகி உடனிருக்கும் கலைஞர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். நீங்கள் நடித்து வெளிவந்த படங்களும்  வெற்றியடைவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தநிலைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர்,  ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களின் உதவியும் தக்கசமயத்தில் அமையும். அரசுவழியில் உதவிகள் கிடைக்கும்.  விளையாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றிலும் பரிசுகளைத் தட்டிச்செல்வீர்கள். உங்களால் உங்கள் பள்ளி,கல்லூரிகளின் பெயர், புகழ்  உயரும்.
 
அவிட்டம் - 3, 4: இந்த மாதம் வீண் செலவை  உண்டாகும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில்  பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
 
ஸதயம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.  புதிய  வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள்  செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேல்  அதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.
 
பூரட்டாதி - 1, 2, 3: இந்த மாதம் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் இருந்த பின்னடைவு  நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.
 
பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.
 
அதிர்ஷ்ட தினங்கள்: Oct 29, 30
 
சந்திராஷ்டம தினங்கள்: Nov 4, 5.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :