செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (18:14 IST)

ஏப்ரல் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

 
கிரகநிலை:
ராசியில்    கேது, சனி - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்,  குரு (அதி. சா) - தைரிய ஸ்தானத்தில்  புதன் -   சுக  ஸ்தானத்தில்  சூர்யன் -  ரண, ருண  ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், ராஹு என கிரகங்கள் வலம் வருகின்றன. 
 
பலன்:
தந்தையின் மீது அதிக பாசம் கொண்டு அவர் பேச்சுக்கு மதிப்பளித்து காத்துக் கொண்டிருக்கும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
 
குடும்பத்தில் ஒற்றுமை கூடும். அரசாங்க ரீதியான அனுகூலமான செயல்கள் உங்களுக்கு தேவையான சமயத்தில் கிடைக்கும். பூமி தொடர்பான விற்பனை தொழில் வாய்ப்புகளைப் பெற்றவர்கள் சுமாரான அளவில் லாபம் பெறுவார்கள். பெற்ற புகழுடன் புதிய புகழும் வந்து சேரும். ஆன்மீக எண்ணங்களில் மனம் ஈடுபாடு கொள்ளும். எதிரிகள் மறைந்திருந்து கெடுதல் செய்வார்கள். உடன் பிறந்தவர்களுடன் கவனமாக இருக்கவும். 
 
தொழில் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். லாபவிகிதங்களை கணக்கில் கொண்டு புதிய மூலதனத்தை தொழிலில் போடுவார்கள். சொகுசான ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து மேன்மை பெறுவார்கள். 
 
உத்தியோகஸ்தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்கு தேவையான பொருளாதாரம் நிறைந்த வகையில் கிடைக்கும். 
 
பெண்கள் கைதொழில் ஒன்றை கற்றுக்கொண்டு பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் தொழில் மேன்மை பெறுவார்கள். அதிக வேலை வாய்ப்புகளை பெற்று நிறைவான பொருளாதாரம் பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். 
 
கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே வாய்ப்புகள் அதிகமாகக் கிடைக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும். 
 
அரசியல்வாதிகள் பொதுமக்களுக்கு செய்யவேண்டிய பணிகள் உங்களுக்கு நிறையவே காத்திருக்கிறது. ஏற்கனவே இருக்கும் நல்ல பெயரை தற்காத்துக் கொள்வதற்கு இந்த காலகட்டம் மிகவும் உதவிகரமாய் இருக்கும். 
 
மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
 
மூலம்:
இந்த மாதம் உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும். மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். 
 
பூராடம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. மாணவர்களுக்கு யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். 
 
உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
 
பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24