வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2019 (16:53 IST)

ஏப்ரல் மாத பலன்கள்: மிதுனம்

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

எந்த இடத்திற்கு சென்றாலும் நேரத்திற்கு சென்று நற்பெயர் வாங்கும் மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு அதிகரிக்கும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும்.

தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். வியாபார போட்டிகள் தடை தாமதங்கள் நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும்.

பெண்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு  கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். சக கலைஞர்களுடன் இருந்து வந்த இடைவெளி குறையும். ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வாழ்க்கை துணையின் உடல் நலனில்  அக்கறை தேவை.

திருவாதிரை:
இந்த மாதம் வேற்று மொழி பேசும் நபரால்  நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனகுழப்பம் தீரும். வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். சோம்பலும் சோர்வும் உண்டாகலாம். மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். சிறிய விஷயங்களுக்கு கூட கோபம் வரலாம். அதனால் உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக  பேசுவது நல்லது. விபரீத ஆசைகள் ஏற்படலாம்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
இந்த மாதம் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடைதாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக  காணப்படும்.  திறமையான செயல்களால் புகழும், அந்தஸ்தும் உயரும். பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். 

பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வணங்கி வாருங்கள் துன்பங்கள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
சந்திராஷ்டம தினங்கள்: 1, 26, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21