புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By

மகரம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்): நண்பர்களிடமும் விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே! 
இந்த மாதம் எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து செயல்படுவதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. பணவிவகாரங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
 
குடும்பத்தில் கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். உற்றார்-உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பொருளாதார நிலையில் ஓரளவுக்கு பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத வீண்செலவுகளால் கடன்வாங்க நேரிடும். திருமண சுபகாரிய முயற்சிகளுக்கு நெருங்கியவர்களே தடையாக இருப்பார்கள்.
 
தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக போட்டி பொறாமைகளையும் சந்திக்க நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தள்ளிவைப்பது நல்லது. எதிர்பார்க்கும் கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தி குறையும். சிலருக்கு பொருட்தேக்கமும் உண்டாகும்.
 
உத்தியோகஸ்தர்கள் தேவையற்ற இடமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதால் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். உடல்நிலை சோர்வடையும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். எந்தப் பணிகளையும் சிறப்பாக செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.
 
பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமையற்ற நிலைகளால் நிம்மதி குறையும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். பணவரவுகளில் பற்றாக்குறை நிலவுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க வேண்டியிருக்கும்.
 
அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டிய காலமாகும். புகழ், பெருமை யாவும் மங்கும். உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெறமுடியும்.
 
கலைத்துறையினருக்கு வரவேண்டிய படவாய்ப்புகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். தனவரவில் தடைகள் உண்டாகி சோதனைகள் ஏற்படும். எனினும் சமாளித்து வெற்றி காண்பீர்கள்.
 
மாணவர்கள் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு படித்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியவில்லையே என மனம் வருந்த வேண்டாம். உங்கள் முயற்சி வீணாகாது. தக்க சமயத்தில் கைகொடுக்கும்.
 
உத்திராடம் - 2, 3, 4: இந்த மாதம் மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும்.
 
திருவோணம்: இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள்  கிடைக்கும்.
 
அவிட்டம் - 1, 2: இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.
 
பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெற்றிலை மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.
 
அதிர்ஷ்ட தினங்கள்: Oct 27, 28
 
சந்திராஷ்டம தினங்கள்: Nov 2, 3.