மனிதமனம்: என்ன சொல்கிறார் ஜக்கி வாசுதேவ்

jaggi
Last Modified செவ்வாய், 12 ஜூன் 2018 (12:44 IST)
மனிதமனம் பெரும்பாலும் போராட்டத்திலேயே இருக்கிறது. பலரும் சின்னச் சின்ன விஷயங்களுக்காகக் கூட போராடிக் கொண்டிருக்கிறார்கள். மனதில் துயரம் இருக்கிற வரைக்கும் இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
 
* வாழ்க்கையை இயல்பாக அதன் எல்லாத் தன்மைகளையும் ஏற்றுக் கொண்டால் ஏற்றத்தாழ்வுகள் மறைந்து விடும். ஆனந்தம் மட்டுமே அப்போது நிலைத்திருக்கும். உள்ளத்தில் ஆனந்தம் நிலைத்திருக்குமானால் புறவுலக வாழ்வின் இன்பதுன்பங்கள் நம்மை சிறிதும் பாதிப்பதில்லை.
 
* நாம் சில விஷயங்களை வேண்டும், வேண்டாம் என்று சொல்லும் போதே நம் மனதில் சில எதிர்பார்ப்புகள் தொடங்கி விடுகின்றன. எதிர்பார்ப்பு உண்டாகும்போது வாழ்வில் விருப்பு, வெறுப்புகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
 
* மனிதர்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் இருப்பது என்பது என்றோ எப்போதோ நிகழும் அனுபவம் என்று எண்ணுகிறார்கள். அதற்கான வாய்ப்பு விநாடிக்கு விநாடி இருக்கிறது. அன்பும், ஆனந்தமும் நிலையான உணர்வாக நம்மிடத்தில் இருக்க வேண்டியவையாகும்.
 
* ஒரு மனிதர் தான் எண்ணுவது சரி என்று உணர்ந்து, மிக அமைதியாக இருப்பாரேயானால் அவர் இறைத்தன்மைக்கு மிக நெருக்கமானவர். அவர் வீண்விவாதங்கள், தேவையற்ற வாக்குவாதங்கள் போன்றவற்றில் சிறிதும் ஈடுபடமாட்டார்.


இதில் மேலும் படிக்கவும் :