செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (06:01 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்! – இன்றைய ராசி பலன்கள்(20.08.2024)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 


மேஷம்
இன்று கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். தொழில், வியாபார நிலையில் அதிகமான போட்டிகளால் லாபம் குறையும். கூட்டாளிகளும் சாதகமின்றி செயல்படுவார்கள். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படுவதால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு அபிவிருத்தி குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

ரிஷபம்
இன்று எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடல்நலக்குறைவுகளால் அடிக்கடி விடுப்பெடுக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்
இன்று  நீங்கள் சோதனையான பலன்களையே சந்திப்பீர்கள். உடல்நிலையில் தேவையற்ற பிரச்சினை களால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் எதிலும் முழுப்பலனை அடையமுடியாது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கடகம்
இன்று  தொழில், வியாபார நிலையிலும் நெருக்கடிகள் ஏற்படும்.  பெரிய முதலீடுகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளாதிருப்பது நல்லது. எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். வெளிவட்டாரப் பழக்கவழக்கங்களால் அனுகூலமான பலனை அடைவீர்கள்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 4

சிம்மம்
இன்று முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்யோகஸ்தர்கள் சரிவரச்செய்து முடிக்க முடியாமல் மேலதிகாரிகளின் ஆதரவுகளை இழப்பார்கள்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், கருநீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4

கன்னி
இன்று  திருமண சுபகாரியங்களுக்கான  முயற்சிகளில் தடை தாமதங்களே நிலவும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

துலாம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.  குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச்செலவுகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது உத்தமம். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

விருச்சிகம்
இன்று  கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே கொடுத்த வாக்குறுதிகளைச் சரியான நேரத்தில் காப்பாற்றி அனைவரின் ஆதரவுகளைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர் பார்த்த லாபத்தைப்பெற நிறைய போட்டிகளை சமாளிக்க நேரிடும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4

தனுசு
இன்று  கூட்டாளிகளை அனுசரித்துச்செல்வதன்மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் போன்றவற்றால் வீண் செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

மகரம்
இன்று உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப்பெற தாமதநிலை ஏற்படும். வேலைப்பளு அதிகரிப்பதால் அதிகநேரம் உழைக்க வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்
இன்று  எதிர்நீச்சல் போட்டாவது நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக  இருந்தாலும் குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் சற்றே குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மீனம்
இன்று  உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கொடுக்கல்-வாங்கலில் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற சில இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத மேன்மைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6