வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (06:01 IST)

இந்த ராசிக்காரர்கள் வீட்டில் மகிழ்ச்சி பெருகும்! இன்றைய ராசிபலன் (10-09-2023)!

astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


 
மேஷம்:
இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா, வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2, 3

ரிஷபம்:
இன்று தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். திறமை வெளிப்படும். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும்.  தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மெரூன்
அதிர்ஷ்ட எண்: 6, 7

மிதுனம்:
இன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை
அதிர்ஷ்ட எண்: 6, 9

கடகம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 8, 9

சிம்மம்:
இன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். மன நிம்மதி  குறையும். வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 5, 8

கன்னி:
இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.  புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்: 2, 5

துலாம்:
இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில்  அக்கறை காண்பீர்கள். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், ஊதா
அதிர்ஷ்ட எண்: 6, 8

விருச்சிகம்:
இன்று எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும்.  விருந்து கேளிக்கை  நிகழ்ச்சியில்  கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5, 6

தனுசு:
இன்று தொழில் வியாபாரம் நன்றாக  நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள்  வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள்.  எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 7, 9

மகரம்:
இன்று குடும்பத்தில் இதமான  சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், ஊதா
அதிர்ஷ்ட எண்: 2, 3

கும்பம்:
இன்று விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும்.  இடமாற்றம் ஏற்படலாம்.  ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும்.  வாகன யோகம் கிடைக்கும். எழுத்துவகையில் எதிலும் சிக்காமல் கவனமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஊதா
அதிர்ஷ்ட எண்: 3, 6

மீனம்:
இன்று கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள்  பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது.  வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  பயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 4