வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (06:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (12-08-2022)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம் 
இன்று சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல்  பணியாற்ற  வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்டஎண்கள்:1,3,9                                                                                                                                                                                            
ரிஷபம் 
இன்று இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம்.  பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்டஎண்கள்:1,3, 5, 9                                                                                                                                                                                                                
மிதுனம் 
இன்று உறவினர்களிடம் கவனம் தேவை. மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடமையைத் தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில்  செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9                                                                                                                                                                                                             
கடகம் 
இன்று காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். செவ்வாய் குருபார்வை பெறுவதால் எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7                                                                                                                                                                 
சிம்மம் 
இன்று எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9                                                                                                                                                                                                                             
கன்னி 
இன்று மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9                                                                                                                                                                                  
துலாம் 
இன்று உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும்.  வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பண புழக்கம் திருப்திதரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9                                                                                                                                           
விருச்சிகம் 
இன்று பாராட்டு கிடைக்கலாம். வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6                                                                                                                                                                                                       
தனுசு 
இன்று தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல்  பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9                                                                                                                                                        
மகரம் 
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக  முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7                                                                                                                                                       
கும்பம் 
இன்று உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9                                                                                                                                                                                                  
மீனம் 
இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். குடும்ப பிரச்சனை, தொழிற்பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும். நல்ல பலன்கள் உண்டாகும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான  நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5