1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 மே 2022 (06:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (25-05-2022)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.  நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7 

ரிஷபம்:
இன்று சுகம் உண்டாகும். பணவரத்து கூடும்.  எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும்  சாமர்த்தியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மிதுனம்:
இன்று வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.  சுக்கிரன் சஞ்சாரத்தால் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனை களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9 

கடகம்:
இன்று தொழில் வியாபாரம்  எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 

சிம்மம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம்  கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 

கன்னி:
இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.  சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்:
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை  செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்:
இன்று ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 10ல் இருப்பதால் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

தனுசு:
இன்று எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்  காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9, 3 

மகரம்:
இன்று கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக் கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச் சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6 

கும்பம்:
இன்று வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.  எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்:
இன்று மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை.  வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7