ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (06:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (22-03-2022)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. கல்வி சம்பந்தமான விஷயங்களில் வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.
அதிர்ஷ்ட எண்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 3, 6, 9

ரிஷபம்:
இன்று மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் நோய் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழில் வியாபாரத்தில் பணவரவு இருக்கும். ஆனாலும் திடீர் போட்டி இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 5, 9

மிதுனம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. நேரத்தை வீணடித்தல் கூடாது. முடிந்தவரை வாக்கு கொடுக்கும் முன் சிந்தித்து வாக்கு கொடுக்கவும். உத்தியோக உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 9

கடகம்:
இன்று குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட நிறம்: 3, 6, 9

சிம்மம்:
இன்று மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. ஆனாலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும்.
அதிர்ஷ்ட எண்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட நிறம்: 6, 9

கன்னி:
இன்று எதிர்பார்த்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலிடத்தின் அனுசரனை கிடைக்கும். சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். தைரியம் அதிகரிக்கும். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள். புதியதாக ஆரம்பிக்கும் எந்த விஷயத்திலும் ஏற்றம் உண்டு.
அதிர்ஷ்ட எண்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட நிறம்: 2, 7

துலாம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட நிறம்: 3, 5

விருச்சிகம்:
இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. பேச்சு திறமை அதிகரிக்கச் செய்யும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட நிறம்: 1, 3, 9

தனுசு:
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிப்போகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலை பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும்.
அதிர்ஷ்ட எண்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட நிறம்: 4, 6

மகரம்:
இன்று தொழிலில் உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். போட்ட திட்டங்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்த தன வருவாய் சிக்கல்களை மெல்ல மெல்ல சமாளிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட எண்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட நிறம்: 3, 5

கும்பம்:
இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்துவது வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட எண்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட நிறம்: 2, 6

மீனம்:
இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட நிறம்: 1, 5, 6