திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 மே 2021 (05:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (12-05-2021)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை  செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 5

ரிஷபம்:
இன்று குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்:
இன்று தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்கள் கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 2, 3

கடகம்:     
இன்று எந்த ஒரு வேலையையும் நுணுக்கமாக செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

சிம்மம்:
இன்று இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக  செய்து முடிப்பார்கள். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

கன்னி:
இன்று அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும்.  குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு  இருக்கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலை யில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்:
இன்று மனதில் மகிழ்ச்சி உண்டாகும் படியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் குறிக்கோளுடன்  செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

விருச்சிகம்:
இன்று எடுத்த காரியத்தை எத்தனை குறுக்கீடுகள் வந்தாலும் அதை சமாளித்து செய்து முடிப்பீர்கள். கவுரவ பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6

தனுசு:
இன்று மற்றவர்களின் செயல்களால் மன அமைதி கெடவும்  வாய்ப்பு உண்டு.  பணவரத்து உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி  நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்:
இன்று புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

கும்பம்:
இன்று குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு  நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும்  உதவி தாமதமாக கிடைக்கும்.  சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மீனம்:
இன்று அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.
மாணவர்கள் சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது.  பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5