செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 22 ஏப்ரல் 2021 (05:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (22-04-2021)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று குடும்பம் முன்னேற பல்வேறு வகையில் உதவி செய்த உங்களுக்கு, அதனால ஏற்படும் பலன்களும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல கண்கூடாக தெரியவரும். கைத்தொழில் மூலம் வருவாய் ஈட்டும் பெண்களின் வேலை வாய்ப்பில் சிறிது சுணக்கம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ரிஷபம்:
இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தங்களது உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து நடவடிக்கைகளுக்கு ஆட்படலாம். எனவே கவனமுடன் செயல்படுங்கள். ஆன்மீக வழிபாடும் பிறருக்கு உதவிகள் புரிவதன் மூலமும் மனமகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

மிதுனம்:
இன்று தம்பதியர் ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகள் உங்கள் மீது பாசம் செலுத்துவார்கள். உடல்நலமும் ஆயுள் பலமும் ஏற்படும். திருமண வயதை அடைந்த பெண்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடி வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உருவாகும். திருத்தல சுற்றுலா செல்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

கடகம்:
இன்று மேன்மை உண்டாகும். திரைக்கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். ஓவியக்கலைஞர்கள் தங்கள் தொழில்திறமையால் நற்பெயர் பெறுவார்கள். கட்டடக் கலைஞர்கள் வேலையில் சற்று சுணக்கம் ஏற்படும். தைரிய சிந்தனை, புகழ் அபிவிருத்தி ஆகும். பகை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

சிம்மம்:
இன்று நண்பர்கள் உதவி செய்வர். சுற்றுலா வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீக சிந்தனைகள் மனதை நல்வழிப்படுத்தும். உயர்பதவியில் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொண்டு காரியத்தை முடித்துக்கொடுப்பதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். நிதானத்துடன் செயல்பட்டு சிரமங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கன்னி:
இன்று தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் சற்று சிரமப்படுவார்கள். அடிதடி, கட்டைப்பஞ்சாயத்து போன்ற விஷயங்களை தவிர்ப்பது நலம். உடல்நலமும், பொருளாதார வளமும் அனுகூலமாக இருக்கும். மற்றவர்கள் புகழும் வகையில் வாழ்க்கை முறையை நெறிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

துலாம்:
இன்று உங்கள் செயல்கள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கியே இருக்கும். எண்ணிய எண்ணங்கள் யாவும் கைகூடும்.  அனைத்து தொழிலிலும் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு இதுவரை இருந்து வந்த திருமணத் தடை நீங்கும். வீடு, வாகனம், ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6

விருச்சிகம்:
இன்று புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் ஏற்படும் துன்பங்கள் மேலோங்கினாலும், சமரச பேச்சால் நல்ல சூழ்நிலை உருவாகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் பேச்சுகளில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். தட்ப வெப்ப மாறுதலால் உடல்நலம் சற்று பாதிக்கப் படலாம். முன்னெச்சரிகையாக இருந்து நோய்களில் இருந்து காத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

தனுசு:
இன்று தந்தை வழி சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடை நீங்கும். வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் சூழ்நிலை உருவாகும். உங்களுக்கு பல்வேறு வழியில் கிடைக்கும் ஆதாயத்தை ஆடம்பரமான பொருட்களில் முதலீடு செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

மகரம்:
இன்று மேல்அதிகாரிகளின் மத்தியில் நல்ல பெயர் எடுப்பீர்கள். சக ஊழியர்களால் தேவையில்லாமல் அதிருப்தியான சூழல் உருவாகும். நடைமுறைச் செலவுகளில் அதிக தேவை ஏற்படும். கடன் வாங்க நேரிடலாம். இருப்பினும் எதிர்கால தேவைக்காக சேமிப்பதில் தடை ஏதும் இருக்காது. மனதில் அசாத்தியமான தைரியம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கும்பம்:
இன்று புகழ் பெறுவதற்குண்டான நல்ல வாய்ப்புகளும் உண்டாகும். பணியில் இருந்துகொண்டே படிப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு கிட்டும். வெளியூர் வெளிநாடு பயணங்கள் உருவாகும் நிலை ஏற்படும்.  பொருளாதார மேன்மை ஏற்படும். நல்ல லாபம் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

மீனம்:
இன்று மனதில் தைரியமும், நல்ல லாபமும் கிடைக்க வழி உண்டு. வியாபாரத்திற்கென்று புதிய அலுவலகம் வாங்குவீர்கள். உங்கள் வியாபாரத்தின் கிளைகளை பரப்புவீர்கள். வியாபாரம் தொடர்பான வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை காணப்படும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6