ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 டிசம்பர் 2020 (05:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (03-12-2020)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும்.

ரிஷபம்:
இன்று சிலருக்கு வீடு மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சுப சம்பவங்கள் நடைபெறும்.

மிதுனம்:
இன்று புத்திர வழியில் பூரிப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.

கடகம்:
இன்று தொழில் வியாபாரத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும். எடுக்கும் காரியங்களில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமானப் பலனை பெற முடியும்.

சிம்மம்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறைந்து மந்த நிலை விலகும். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. தேவையற்ற பிரச்சனைகளால் குழப்பங்கள் உண்டாகும்.

கன்னி:
இன்று மற்றவர்களின் மனதை துல்லியமாக எடைபோடுவீர்கள். எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள், கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும்.

துலாம்:
இன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.

விருச்சிகம்:
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை பெற முடியும். வீண் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள்.

தனுசு:
இன்று வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. நல்ல பொறுமையும், எதிலும் திறமையுடன் செயல்படும் ஆற்றலும் மேலோங்கும்.

மகரம்:
இன்று உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது.

கும்பம்:
இன்று கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிட்டும்.

மீனம்:
இன்று வேலைப் பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.