வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 11 மார்ச் 2020 (05:00 IST)

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (11-03-2020)!

இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்
இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். திருமணவயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

ரிஷபம்
இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். பெயர், புகழ் அதிகரிக்கக்கூடிய காலமாகும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்
இன்று மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பதவிக்கு இருந்த இடையூறுகள் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகளை அடைவீர்கள். உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி
ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கடகம் 
இன்று வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு.விளைச்சல் மிகச்சிறப்பாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தனவரவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளைக் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, நிலம், மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

சிம்மம்
இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இதுவரை வராமல் தடைப்பட்ட பணத்தொகை கைக்கு வந்துசேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் மேன்மைகளும் உண்டாகும். உடனிருக்கும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியளிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கன்னி
இன்று பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. பேசும் போது வார்த்தைகளை கோர்த்துப் பேசுவது நல்லது. கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகி மாணவர்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். படிப்புக்காக எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

துலாம்
இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றியினைப் பெறுவீர்கள். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் எந்தக் காரியத்திலும் எளிதாக ஈடுபடமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

விருச்சிகம்
இன்று உற்றார்-உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் கனவுகளும் நனவாகும். கடன்கள் அனைத்தும் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு
இன்று தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்படும். கொடுக்கல்-வாங்கலிலும் எதிர்பார்த்த லாபம் அமையும். பெரிய மனிதர்களின் நட்பு அனுகூலப்பலனை உண்டாக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பணம் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்
இன்று குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருட்சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபங்கள் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கும்பம்
இன்று எதிர்பார்த்த கடனுதவிகள் தடையின்றிக் கிடைப்பதால் தொழிலில் நல்ல அபிவிருத்தி பெருகும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 7, 8

மீனம்
இன்று கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்-உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறக்கூடிய நாள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5