இன்றைய ராசி பலன்கள்


Murugan| Last Modified செவ்வாய், 23 பிப்ரவரி 2016 (04:30 IST)
இன்றைய கிரக நிலைகள் மற்றும் ராசி பலன்கள் குறித்து ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.வி‌த்யாதர‌ன் அவர்கள் க‌ணி‌த்து‌க் கூறியுள்ளா‌ர்.

 
 
மேஷம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும்.    
 
அதிஷ்ட எண்: 8
 
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன் 
 
ரிஷபம்: திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள்.      
 
அதிஷ்ட எண்: 9
 
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
மிதுனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.  
 
அதிஷ்ட எண்: 6
 
அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
கடகம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.               
 
அதிஷ்ட எண்: 1
 
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அலைகழிக்கப்படுவீர்கள். 
 
அதிஷ்ட எண்: 2
 
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சொந்த-பந்தங்களுடன் மனத்தாங்கல் வரும். உடல் நலம் பாதிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் உயரதிகாரிகளால் பிரச்னைகள் வரக்கூடும்.   
 
அதிஷ்ட எண்: 4
 
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
துலாம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.   
 
அதிஷ்ட எண்: 2
 
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
 
விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள்.   
 
அதிஷ்ட எண்: 7
 
அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
 
தனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.  
 
அதிஷ்ட எண்: 8
 
அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
 
மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது.  
 
அதிஷ்ட எண்: 1
 
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
 
கும்பம்: பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.  
 
அதிஷ்ட எண்: 3
 
அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
 
மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. மனதிற்கு இதமான செய்திகள் வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். 
 
அதிஷ்ட எண்: 2
 
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்


இதில் மேலும் படிக்கவும் :