வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala

சதுரகிரி மலையில் கண்முன்னே மறைந்த சித்தர் - பகீர் வீடியோ!

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால்  உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள்  சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.

 
தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள்  நிறைந்த குன்றை "சஞ்சீவிமலை' என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
 
சதுரகிரி மலையில் உள்ள கோரக்கர் குகையில் இருக்கும் சித்தரை படம்பிடிக்க சென்றது ஒரு தனியார் தொலைக்காட்சியை  சேர்ந்த செய்தியாளர் குழு. அங்கு அவர்கள் பதிவு செய்த விஷயத்தை பார்க்கும் போது நம்மால் நம்பமுடியவில்லை. நம்பாமல்  இருக்கவும் முடியவில்லை.
 
தற்போது வரை உலகில் பல நம்ப முடியாது அதிசயங்களும், அமானுஷ்யங்களும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. அதில்  ஒன்று தான் சித்தர்கள் தற்போது வரை உயிரோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை. அவர்கள் நம் கண்களுக்கு தெரியாமல்  இன்றுவரை உயிரோடுதான் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
 
சதுரகிரி மலைப்பகுதியில் கோரக்கர் குகையில் இருக்கும் சித்தர், தியானத்தில் இருக்கும் போது தானே பூஜைகள் நடைபெற்று  மாலை இறைவன் கழுத்தில் விழுகிறது. கற்பூரம் ஊதுபத்திகள் தானே எரிகிறது பூஜையின் முடிவில் சித்தர் கண் முன்னே  மாயமாய் மறைகிறார்.
 
இதனை சித்தரின் அனுமதியுடன் ஜீ தொலைக்காட்சி குழுவினர் வீடியோ பதிவு செய்தனர்.  படம் பிடித்து, பார்த்த அவர்களால்  அது அனைத்தும் உண்மை என தெரிந்து, திகைத்து திரும்பியுள்ளனர். அதன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 
அந்த அமானுஷ்ய வீடியோ....

நன்றி: அருண் குமார்