1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (09:42 IST)

ஆர்.கே.நகர் தேர்தல் ; இரட்டை இலை சின்னம் யாருக்கு?

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தில் யார் போட்டியிடுவார் என்ற குழுப்பம் நிலவுகிறது.


 

 
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்நிலையில், அவர் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். எனவே, அந்த தொகுதி தற்போது காலியாக இருக்கிறது. வருகிற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே அறிவித்தபடி ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். சசிகலா அணி சார்பில், அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினரன் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. அதேபோல், ஓ.பி.எஸ் அணி சார்பில் முன்னாள் அவைத்தலைவரும், ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான மதுசூதன் களம் இறக்கப்படலாம் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், இரட்ட இலை சின்னத்தில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும், குழப்பமும் எழுந்து வருகிறது. தற்போது அதிமுக சசிகலா பிடியில்தான் இருக்கிறது. அவரின் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வராக இருக்கிறார். ஆனால், நாங்கள்தான் உண்மையான அதிமுக என ஓ.பி.எஸ் அணி தொடர்ந்து கூறி வருகிறது. மேலும், சசிகலாவை பொதுச்செயலாளராக நியமனம் செல்லாது என தேர்தல் கமிஷனிடம் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தீர்ப்பு, சசிகலாவிற்கு எதிராகவே வரும் என ஓ.பி.எஸ் அணி திடமாக நம்புகிறது.
 
சசிகலா நியமனம் செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்து விட்டால், சசிகலா நியமித்த தினகரனனின் துணைப் பொதுச் செயலாளர் பதவியும் செல்லாது. எனவே, ஓ.பி.எஸ் அணி, பொதுச்செயலாளரை தேர்ந்தெடுத்து அதிமுகவை கைப்பற்றுவதோடு, இரட்டை இலைச் சின்னத்தையும் கைப்பற்ற முயற்சி செய்யும். 
 
ஆனால், அந்த தீர்ப்பு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு முன்பாகவே வருமா எனத் தெரியவில்லை. அந்த தீர்ப்பு வருவதற்குள், தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிடுவார் என தினகரனின் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
 
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பல பரபரப்பான அரசியல் நிகழ்வுகளை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.