ஜெயலலிதா இப்படி ஆக நானே காரணம் : சுப்பிரமணிய சுவாமி அதிரடி
ஜெயலலிதா இப்படி ஆக நானே காரணம் : சுப்பிரமணிய சுவாமி அதிரடி
மருத்துவமனையில் இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த அனைத்து துறைகளும், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்கு நானே காரணம் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், அரசு எந்திரம் முடங்கி போயிருப்பதால், தற்காலிக முதல்வர் நியமிக்கப்படவேண்டும் என திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் உட்பட சிலர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல் படுத்த வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், அதிமுக முக்கிய அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோரிடம் இதுகுறித்து ஆலோசனை செய்ததாகவும், அதன் அடிப்படையில், முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்த துறைகள் தற்போது அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா குணமடைந்து வரும் வரை, அந்த பொறுப்புகளை அவர் ஏற்பார் என்றும், அதுவரை இலாகா இல்லாத முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி “ அமைச்சரவையின் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டதற்கு, ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த நான் விடுத்த கோரிக்கையே காரணம். அதன்பின்புதான், ஆளுநர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.