ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2017 (14:35 IST)

நடந்ததை கூறாவிடில் பாவத்திற்கு ஆளாவேன் - ஓ.பி.எஸ் உருக்கம்..

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று நண்பகல், சென்னை கீரிம்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


 

 
அப்போது அவர் கூறியதாவது:
 
ஜெ.வின் மறைவிற்கு பின், சசிகலா என்னைக் கேட்டுக் கொண்டதாலேயே நான் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டேன். ஆனால், அதன்பின் சசிகலாவை முதல்வராக தம்பிதுரை போன்றவர்கள் முன்னிறுத்தினார்கள். அது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும், பல்வேறு வகையில் என்னை சசிகலா தரப்பு அவமானப்படுத்தினார்கள். என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கினார்கள்.
 
அதன்பின் ஜெ.வின் சமாதிக்கு சென்று தியானம் செய்டு விட்டு, ஊருக்கு கிளம்பி செல்லலாம் என நினைத்தேன். ஆனால் அங்கு மக்களும், செய்தியாளர்களும் கூடி விட்டனர். அவர்கள் கேள்வி எழுப்பியதால், பேச வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மேலும், நடந்ததை தெரிவிக்கவில்லை எனில் பாவத்திற்கும், மக்களின் இழிசொல்லுக்கும் ஆளாகுவோம் எனத் தோன்றியது. அதனால்தான் எனக்கு நடந்த அவமானங்கள் குறித்து தெரிவித்தேன். 
 
ஜெ.வின் மர்ம மரணம் குறித்து மக்களிடம் சந்தேகம் இருக்கிறது. சசிகலா குடும்பத்தினர் மேல் அவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். ஜெ. மர்மம் தொடர்பான மர்மங்கள் விலகும் வரை எங்கள் தர்ம யுத்தம் தொடரும்” என அவர் பேசினார்.