1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By bala
Last Updated : வியாழன், 2 மார்ச் 2017 (13:36 IST)

லாலுவை போலதான் சசிகலாவும் - வாயைவிட்டு சிக்கிய நவநீதகிருஷ்ணன்

லாலு பிரசாத் யாதவ் கூட குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டவர்தான். அவர் கட்சித் தலைவராக இல்லையா. அது போலத்தான் சசிகலாவும், அதிமுக பொதுச் செயலாளராக இருக்கிறார் என்று கூறினார்.


 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இத்ற்கு கட்சி மட்டத்திலிருந்து மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி எழுந்தது. இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ஓபிஎஸ் தலைமையிலான அணியினர் சசிகலாவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தனர். அதில் கட்சியின் விதிகளுக்கு உட்பட்டு சசிகலா பொதுச் செயலாலராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என கூறியிருந்தனர். மேலும் குற்றவாளியான ஒருவர் கட்சி தலைமை பதவியை விட்டு நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் அதிமுக எம்.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், லாலு பிரசாத் யாதவ் கூட குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டவர்தான். அவர் கட்சித் தலைவராக இல்லையா?. அது போலத்தான் சசிகலாவும், அதிமுக பொதுச் செயலாளராக இருக்கிறார் என்று கூறினார். மேலும் கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என்றும் கூறினார்.

சசிகலா தரப்பில் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய ஆலோசித்துவரும் நிலையில் நவநீத கிருஷ்ணனின் பேச்சு லாலுவை போல சசிகலாவும் குற்றவாளி என்பதை அவரது கட்சி உறுப்பினரே உறுதி செய்வது போல் உள்ளது என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.

லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் தனது முதல்வர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.