செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. தேர்தல் அலசல்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (07:45 IST)

எத்தனை வேட்மனுக்கள் நிராகரிக்கப்படும்? இன்று பரிசீலனை!

வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்பட்டு முறைப்படி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். 

 
தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது என்பதும் நேற்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எத்தனை பேர்? மாநகராட்சி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் எத்தனை பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்? என்பது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
அதன்படி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிக்கு 6,818 பேரும், நகராட்சிக்கு 12,171 பேரும், பேரூராட்சிக்கு 20,847 பேரும் மனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 
மேலும் வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்பட்டு முறைப்படி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். 7 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.