1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. கட்டுரைகள்
Written By sivalingam
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2018 (18:03 IST)

ஃபேஸ்புக் ரோமியோக்களிடம் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உலகின் நம்பர் ஒன் சமூகவலைத்தளமான ஃபேஸ்புக் எந்த அளவுக்கு உபயோகமாக இருக்கின்றதோ, அதே அளவுக்கு அதனால் ஏற்படும் தொல்லைகளும் அதிகம், குறிப்பாக பெண்களுக்க் திடீர் ரோமியோக்களால் ஏற்படும் அவஸ்தை சொல்லி மாளாது. இந்த பிரச்சனையை நாகரீகமாக தடுப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்



1. தெரியாதவர்களிடம் இருந்து வரும் ஃபிரெண்ட் ரிக்யூவஸ்ட்டை ஏற்று கொள்ள வேண்டும். முதலில் நண்பர்கள் என உள்ளே நுழைய தொடங்கும் ரோமியோக்கள் பின்னர் இன்பாக்ஸில் வந்து தங்கள் வேலையை காண்பிப்பார்கள். எனவே  ஃபிரெண்ட் ரிக்யூவஸ்ட்டில் கவனமாக இருக்க வேண்டும்

2. உங்களுக்கு விஜய் பிடிக்குமா? அஜித் பிடிக்குமா? போன்ற கேள்வி கேட்கும் நபர்களுக்கு கமெண்ட் போட வேண்டாம். இதில் கமெண்ட் போட்டால் அந்த கமென்ட்டை பார்ப்பவர்கள் அதை கிளிக் செய்து நேராக உங்கள் பக்கத்திற்கு வந்து ஃபிரெண்ட் ரிக்யூவஸ்ட் கொடுக்க தொடங்கிவிடுவார்கள்

3. பேஸ்புக்கில் ஒருவரது ஸ்டேட்டஸ் உங்களுக்கு பிடித்துவிட்டால் அவருக்கு உடனே ஃபிரெண்ட் ரிக்யூவஸ்ட் கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக அவரை ஃபாலோ மட்டும் செய்யுங்கள். இதனால் அவரது ஸ்டேட்டஸ்கள் உங்களுக்கு வரும் ஆனால் உங்களது எந்த தகவலும் அவருக்கு போகாது.

4. முக்கியமாக ஃபேஸ்புக்கில் உங்களது பர்சனல் மொபைல் நம்பரை பதிவு செய்ய வேண்டாம். அப்படியே பதிவு செய்தாலும் அந்த நம்பர் உங்களுக்கு மட்டும் தெரியும்படி செட்டிங்ஸ் செய்து கொள்ளுங்கள்

5. மேலும் ஃபேஸ்புக்கில் அந்தரங்க, மற்றும் குடும்பத்தினர்களின் புகைப்படங்களை பதிவு செய்யும் போது கவனமாக இருங்கள். கூடுமானவரை புகைப்படங்களை தவிர்க்க வேண்டும். சில புல்லுருவைகள் உங்கள் போட்டோவை எடுத்து போட்டோஷாப் செய்து மன நிம்மதியை இழக்க செய்துவிடுவார்கள்