குடியரசு தின விழாவில் சசிகலா குடும்பத்திற்கு செக் வைத்த ஓ.பி.எஸ்?
குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை தொடங்கிய விழாவில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மாராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் இருந்ததால், முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வமே தேசியக் கொடியேற்றினார்.
இந்நிலையில், இந்த விழாவில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டிய சசிகலா குடும்பத்தினருக்கு அவர் அனுமதி மறுத்திவிட்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
அதிமுக கட்சி மற்றும் ஆட்சியில் முக்கிய பதவிகளை பெற சசிகலாவின் குடும்பத்தினரான நடராஜன், தினகரன், திவாகரன் ஆகியோர் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று நடைபெறும் விழாவில், தங்களை விவிஐபி-களாக காட்டிக்கொள்ள அவர்கள் முடிவெடுத்திருந்ததாகவும், ஆனால், கடைசி வரைக்கும் விவிஐபி அனுமதி சீட்டை அளிக்காமல், ஓபிஎஸ் அதை முறியடித்து விட்டதாகவும், இதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த விழாவில் ஓ.பி.எஸ் தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.