செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 16 ஜூலை 2017 (21:46 IST)

மு.க.ஸ்டாலினின் கோபச் செய்தியில் கமலின் ஆதங்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் தமிழக அரசை எதிர்த்து விமர்சனம் செய்தபோது அமைச்சர்களால் அவர் மிரட்டப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு எந்த அரசியல்வாதியும் ஆதரவு கொடுக்க முன்வரவில்லை. ஆனால் முதல்முறையாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 



 
 
ஸ்டாலினின் அறிக்கைக்கு கமல் தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது:
 
அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில்  எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான்  என்பதை உணர மறுப்பவர்  தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது' என்று தெரிவித்துள்ளார்.
 
கமல், ஸ்டாலினின் இந்த நெருக்கம் இனியும் தொடரும் என்றும், வரும் தேர்தலில்போது கமல் ஒரு அதிரடி முடிவை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.