திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (22:43 IST)

கமல்ஹாசனுக்கு நீட் டுவீட் தேவையா? குவியும் கண்டனங்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் அரசியல் குறித்து கடந்த சில மாதங்களாக ஆக்கபூர்வமான டுவீட்டுக்கள் பதிவு செய்ததால் அவர் மீது பொதுமக்களுக்கு மரியாதை எழுந்தது.


 


ஆனால் திடீரென ஊழல் கட்சி என்று அனைவராலும் தூற்றப்படும் திமுகவின் 'முரசொலி' பவளவிழாவில் கமல் கலந்து கொண்டது சிறிய நெருடலை ஏற்படுத்தியது. அந்த விழாவில் தனது நீண்டகால நண்பரை அவர் எதிரிலேயே மறைமுகமாக தாக்கியது கமல் மீதிருந்த மரியாதையை மேலும் குறைத்தது.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'பள்ளிப் படிப்பை முடிக்காதவன்
" நீட்" ன்கொடுமை புரியவில்லை' என்று தனது டுவிட்டரில் பதிவு செய்த கமல்ஹாசன் இன்று, 'நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள்' என்று டுவீட் பதிவு செய்துள்ளார்.
 
இந்த டுவீட்டுக்கு அவரது டுவிட்டர் பக்கத்திலேயே கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்த கண்டனங்களை கமல் படித்து பார்த்தாரா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் கமலுக்கு முதல்முறையாக பொதுமக்களிடம் இருந்தே எதிர்ப்பு கிளம்பிவிட்டது என்பது மட்டும் உண்மை என தெரிகிறது