திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2017 (21:35 IST)

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அவசர அழைப்பு: இணைகிறதா? மீண்டும் உடைகிறதா?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு அணியாக செயல்பட்டு கொண்டிருக்கும் அதிமுக விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 


அதிமுகவின் பிளவுக்கு முக்கிய காரணம் சசிகலா முதல்வராக வேண்டும் என்ற பேராசைதான். அந்த பேராசையே அவரை சிறைக்குள் தள்ளியது. சசிகலாவின் நிலையில் இருந்து கூட பாடம் கற்று கொள்ளாத தினகரனும் முதல்வர் பதவியை நோக்கி காயை நகர்த்த தற்போது அவரும் சிறை செல்லும் நேரம் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மன்னார்குடி மாஃபியாக்கள் இல்லாத ஒருங்கிணைந்த அதிமுக உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக நாளை அனைத்து எம்.எல்.ஏக்களும் சென்னை வருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார். அனேகமாக நாளை ஓபிஎஸ் மற்றும் எடப்பாடியார் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.