1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Anadhakumar
Last Updated : திங்கள், 13 மார்ச் 2017 (20:35 IST)

என் உயிர் இருக்கும் வரை அதிமுக-வில் தான் இருப்பேன்

செந்தில் பாலாஜி ஓபிஎஸ் அணியில் சேர போவதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், என் உயிர் இருக்கும் வரை அதிமுக-வில் தான் இருப்பேன் என கூறியுள்ளார்.


 

 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ வி.செந்தில் பாலாஜி, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்க போவதாக செய்திகள் பரவியது. இன்று அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புகளூர் பகுதியில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார். 
 
அப்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
 
அம்மாவின் வழியில் நான் முதலில் அம்மா பேரவை கிளை செயலாளராகவும், இணை செயலாளராகவும், மாணவரணி மாவட்ட செயலாளராகவும், மாவட்ட கழக செயலாளராகவும் பணியாற்றினேன். இப்போதும், அரவக்குறிச்சியின் எம்.எல்.ஏ.வாகவும், அதிமுக-வின் எம்.எல்.ஏ.வாகவும் இருக்கின்றேன் என்றதுடன், அம்மாவின் கனவை நனவாக்கிட சின்னம்மா (சசிகலா) வழியில், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் கரத்தை வலுப்படுத்துவேன். 
 
மேலும் என் உயிருள்ளவரை புரட்சித்தலைவியின் வழியில் அவர் கண்ட கனவை நனவாக்குவது தான், என்று கூறினார். 
 
-சி.ஆனந்தகுமார்