புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. மகளிர் விருப்பம்
Written By Sasikala

கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணம் என்ன...?

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது இயல்பே. இப்படி இரத்த சோகை இருக்கும் போது அவர்கள் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் சிவப்பு இரத்த அணுக்கள் மூலம் தசைகளுக்கும், குழந்தைக்கும் போதுமான அளவு கிடைக்காமல் போகின்றது. 
 


கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச் சத்து நிறைந்து உணவை அதிகம் பரிந்துரைக்கின்றார்கள். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், கர்ப்பிணிப்  பெண்களுக்கு ஏற்படக் கூடும்.
 
கர்ப்பத்திற்கு முன் ஏற்பட்ட கடைசி மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கு ஏற்படுவதால் ஹீமோகுளோபின் அளவு குறையும். உணவுக் கட்டுப்பாட்டிலிருந்தால், போதுமான இரும்புச் சத்து கிடைக்காமல் ஹீமோகுளோபின் அளவு குறையும்.
 
கர்ப்ப காலத்தில் உடலில் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அதிகம் இரத்தம் உற்பத்தி ஆகும். இப்படி இருக்கும் போது கர்ப்பிணிப் பெண்கள் போதுமான  இரும்புச் சத்து நிறைந்த உணவை உண்ணாமல் இருந்தால், உடலுக்குத் தேவையான போஷாக்கு கிடைக்காமல் போகலாம். இதனால் சிவப்பு இரத்த அணுக்களின்  உற்பத்தியும் குறையத் தொடங்கலாம். 
 
ஹீமோகுளோபின் தேவையான அளவிலிருந்து சற்று குறைந்து இருந்தால், அதில் பெரிதாக எந்த உபாதைகளும் உடலுக்கு ஏற்படாது. எனினும், கர்ப்பிணிப்  பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் மிகப் பெரிய வகையில் ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் கூடும்.
 
கர்ப்பம் அடையும் முன் இரத்தம் தானம் செய்திருந்தால் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது. உடலில் இரும்புச் சத்து சரியாகக்  கிடைக்கப் பெறாமல் போனால் இது நேரலாம். முதல் குழந்தை பிறந்த உடனேயே போதிய இடைவெளி இன்றி, அடுத்த குழந்தையைக் கருவுறும் சமயத்தில்  ஹீமோகுளோபின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.