வியாழன், 21 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By Sasikala
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (17:30 IST)

வீட்டை வாஸ்துப்படி அமைப்பதால் என்ன பலன்கள்...?

Vastu - Feet Benefits
நமக்கு தெரியும் வாஸ்து என்பது ஒருவர் வீடு கட்டும் பொழுது பார்க்கக் கூடிய பலன் என்று. அந்த பலனை முழுமையாக நாம் பெற வேண்டுமானால் அந்த வீட்டை அல்லது கட்டிடத்தை வாஸ்துப்படி கட்டுவது தான் நல்லது.


ஒருவருடைய வீட்டில் லக்ஷ்மி அருள் கிடைக்கப் பெற வேண்டுமானால் முதலில் நாம் வாழும் வீடு வாஸ்துப்படி அமைந்திருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.

வாஸ்து பகவானை திருப்திப்படுத்தினால் தான் வீட்டில் லக்ஷ்மி பெருக அவர் வழி காட்டுவார். அதாவது ஒருவர் வீட்டில் பணம் பெருகுவதற்கு வாஸ்து ஒரு முக்கிய காரணம்.  எனவே நான் கூறுவது என்னவென்றால் பணத்திற்கும், வாஸ்துவிற்கும்  தான் சம்பந்தம் உண்டு.

வீடு கட்டும் போது வாஸ்து மிகவும் முக்கியமானது. இயற்கையின் ஐந்து கூறுகளான காற்று, நீர், நெருப்பு, பூமி மற்றும் வானம் ஆகியவை சமநிலை பெற்றிருக்கும் இடத்தில் சகல சம்பத்துக்களும் தேடி வரும். இந்த சமநிலையே வாழ்க்கைக்கு செழிப்பைக் கொண்டுவருகிறது. எனவே நீங்கள் ஒரு வீட்டைக் கட்டும்போது இந்த பஞ்சபூதத்தை கணக்கில் கொள்வது தான் வாஸ்து.

நம் வாழ்வில் கட்டிடக் கலை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதன் மூலம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியை பெறலாம் என்பதோடு, வீட்டில் நேர்மறையான ஆற்றல் கொண்டுவரும் என நம்பப்படுகிறது. தற்போது கட்டப்படும் பெரும்பாலான பெரிய கட்டிடங்கள் பஞ்சபூதங்களை கருத்தில் கொண்டு கட்டப்படுகின்றன.